தேசியத் தலைவனாக வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான்: சுட்டிக் காட்டிய சீ.வி.கே.சிவஞானம் !

0
364

sivagnanamதேசியத் தலைவனாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்க முடியும் வேறு ஒருவரும் தலைவனாக இருக்க முடியாது என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக் காட்டியுள்ளார்.

வடமாகாண சபையில் வியாழக்கிழமை அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தேசியத்தலைவர் என குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் நேற்று முன்தினம் யாழ்.கிறீன் கிறஸ்ட் விருந்தினர்  விடுதியில், கிளை குழு கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தின் போது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே தேசியத் தலைவர் என சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் தமிழ் இனத்தின் தேசிய தலைவனாக தந்தை செல்வநாயகம் அப்போது இருந்தார். தற்போது தமிழரசு கட்சியின் பெரும் தலைவனாகவும் தமிழ் இனத்தின் தலைவனாகவும் இரா.சம்பந்தன் இருக்கின்றார்.

இவர்களை விட வேறு எவரும் தேசியத் தலைவனாக இருக்க முடியாது என சுட்டிக்காட்டினார்.

தேசிய தலைவர் என்று கூறுகின்ற ஒரே ஒரு தலைவர் தான் இருந்திருக்கிறார் அது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான் அதற்கு முன்பும் அப்படி ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை அதற்கு பின்னும் என்னுமொரு தேசிய தலைவர் உருவாக போவதில்லை என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில்வியாழக்கிழமை மாலை நடைபெற்ற யாழ் மாவட்ட தமிழரசு கட்சின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் கருத்துதெரிவிக்கையில்…

தமிழ் தேசிய இனத்தினை பொறுத்தவரையில் தமிழ் தேசிய இனத்தின் தலைவராக ஆரம்பத்திலிருந்து தந்தை செல்வா இருந்து வந்திருக்கிறார் அதற்கு பின்னால் இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கை தமிழரசு கட்சியின் உயர் தலைவராகவும் இருக்கின்ற சம்பந்தன் அவர்களே தமிழ் தேசிய இனத்தின் தலைவராக இருக்கிறார்.

தமிழ் தேசியம் என்று பேசுகின்ற நாங்கள் எல்லோரும் தேசிய தலைவர் என்று கூறுகின்ற ஒரே ஒரு தலைவர் தான் இருந்திருக்கிறார் அது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான் அதற்கு முன்பும் அப்படி ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை அதற்கு பின்னும் என்னுமொரு தேசிய தலைவர் உருவாக போவதில்லை என்பது எங்களுடைய தெளிவான நிலைப்பாடு பிரபாகரனுக்கு பின்னும் முன்னும் பிரபாகரன் மட்டும் தான் தேசிய தலைவர்.

பிராந்தியங்களின் ஒன்றியம் என்பது சந்திரிகாவின் அரசியல் தீர்வு முன்மொழிவுகளில் உள்ளடக்கப்பட்ட விடயம் அதனை ஆங்கிலத்தில் union of regions என்று சொல்லப்பட்டு இருக்கிறது unitery state என்று சொல்லுகின்ற ஒற்றையாட்சி முறையிலிருந்து மாறுபட்டு அது ஏற்றுகொள்ளதா முறைமையை கொண்டு வருவதற்காகதான் union of regions என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. சநபழைளெ என்பது எங்களை பொறுத்த வரையில் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தான் அது பிழையான விடயம் அல்ல அதுக்கும் ஒருவிதாமன சமஸ்டி அமைப்பு தான் அது தான் எங்களுடைய முடிவான முடிவாக நாங்கள் கருதவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here