நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிறையில் வாடும் இளைஞர்களுக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வலியுறுத்தியுள்ளது.
1916 ஆம் ஆண்டு உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் சிங்கள அரசியல் கைதிகளுக்கு விடுதலை வேண்டி தனது உயிரையும் பணயம் வைத்து சேர். பொன். இராமநாதன் லண்டன் சென்று வௌ்ளைக்கார ஆட்சியாளர்களுடன் வாதிட்டதாக அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் நினைவுகூரப்பட்டுள்ளது.
சிங்கள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுத்ததால் சேர். பொன். இராமநாதன் இலங்கையின் பெரும்பான்மைச் சமூகத்தினராலும் மாபெரும் மனிதராகப் போற்றப்பட்டதாக இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் மற்றும் பொதுச் செயலாளர் முத்தையா கதிர்காமநாதன் ஆகியோரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்று பெரும்பான்மை சமூகத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்கத்தின்கீழ் சேர். பொன். இராமநாதன் பெயரில் ஒரு அகதி முகாம் இயங்குவதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.