பிரான்சில் லெப். கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட ஒக்டோபர் மாத மாவீரர்களின் நினைவேந்தல்!

0
95

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல். புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளின் நினைவாகவும், லெப் கேணல் சந்தோசம் அம்மான், லெப். கேணல் விக்ரர், லெப்கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் 2 ஆம் லெப். மாலதி ஆகியோரது நினைவுசுமந்து பொபினி நகரத்தில் நேற்று 02.11.2024 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடரினை பொபினி நகர பிதா அப்துல் சாடி அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 26.11.1996 அன்று பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கப்டன் கஜன் அவர்களின் சகோதரர்கள் மற்றும் மாவீரர் குடும்பத்தினர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வுகளாக மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள், கவிதைகள் இடம்பெற்றன.

நினைவுரையை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு துணைப்பொறுப்பாளர் திரு. அமுதன் அவர்கள் ஆற்றியிருந்தார்.

காலத்தின் தேவை, இன்றைய சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள், தமிழர் தேசத்தின் இன்றைய நிலைபற்றியும் மாவீரர்களின் உயிர் ஈகம் பற்றியும் அவர்கள் நினைவுகளைச் சுமந்து தமிழீழ மக்கள் நாம் பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவு பெற்றது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here