ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணி வரை தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டத் தொடங்கியுள்ளது.
சம்பா பகுதியில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகப்பு படை வீரர் ஒருவர் பலியானார். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தங்கள் வீரர்களின் மரணத்தால் பாதிப்படைந்த பாகிஸ்தான் ராணுவம் வெள்ளைக் கொடி காட்டி, தாக்குதலை நிறுத்தும்படி கோரியது. இறந்த வீரர்களின் உடலை எடுத்துச் செல்வதற்காக பாகிஸ்தான் ராணுவம் அவ்வாறு கோரியது.
அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்திய தரப்பு தாக்குதலை நிறுத்தியது. இதனிடையே சம்பா மாவட்டத்தில், 13 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.