யாழ். பருத்தித்துறையில் கணவன் மனைவி கொடூரமாகப் படுகொலை!

0
91

வடமராட்சி பருத்தித்துறை புனிதநகர்
பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கணவன் மனைவி ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் அவர்களின் வீட்டில் இருந்து இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வேலைக்குச் செல்வதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய
போது பதில் இல்லாமை காரணமாக குறித்த வீட்டிற்கு இன்று (30.10.2024 ) ஞாயிற்றுக்கிழமை காலை சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்

50 மற்றும் 51 வயதான இரண்டு பிள்ளைகளின் பெற்றோரே இவ்வாறு கொடூரமான நிலையில் கற்களால் தலையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பருத்தித்துறை நீதிவானுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here