பிரான்சு தழுவிய திருக்குறள் திறன் இறுதி போட்டிகள் இன்று 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை கொலோம்ப் (COLOMBES) நகரில் சிறப்புற நடந்தேறியது.
குறித்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு தமிழ்ச் சோலை தலைமைப் பணியகம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
இன்றைய போட்டிகளில் முதல் மூன்று இடங்களினைப் பெற்றவர்களுக்கான வெற்றிக் கேடயங்களும் சான்றிதழ்களும், இறுதிப் போட்டிகளில் பங்குபற்றிய அனைவருக்குமான பதக்கங்களும் சான்றிதழ்களும் 04-01-2025 இல் நடைபெறும் 26வது தமிழ்ச்சோலை முத்தமிழ் விழாவில் வழங்கப்படும்.
தமிழ்ச்சோலை மட்ட, திணைக்கள மட்ட, இறுதிப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.
அனைத்து மட்டங்களிலான திருக்குறள் திறன் போட்டிகளிலும் நடுவர்களாகப் பங்கேற்றவர்களுக்கும், போட்டியாளர்களை வழிகாட்டி நெறிப்படுத்திய தமிழ்ச்சோலை நிர்வாகிகள் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும், திணைக்கள மட்டத்திலான போட்டிகளுக்காக மண்டபத்தினை ஏற்பாடு செய்துதவிய விளையாட்டுக்கு கழகம்-95 இற்கும், இன்றைய இறுதிப் போட்டிகளுக்கான மண்டபத்தினை ஏற்பாடு செய்துதவிய கொலோம்ப் தமிழ்ச்சங்கத்திற்கும் போட்டிகள் நடைபெற அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மகிழ்வுடன் நன்றி நவில்கின்றது.
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”
- தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு –