ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் பிரான்ஸ் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்ஸ் நடாத்தும்
கேணல் பரிதி(றீகன்),
லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்கள் நினைவுசுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (27.10.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு Plaine Sud, Parc interdépartemental des Sports Val De Marne, 94000 Créteil. பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைத் துணைப் பொறுப்பாளர் திரு.யோதி அவர்கள் ஏற்றி வைத்தார்.
ஈகைச்சுடரினை 23.04.1987 அன்று யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் நிலான் அவர்களின் சகோதரி ஏற்றி வைக்க, மலர்வணக்கத்தை 1991 அன்று ஆனையிறவு மோதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் நிரோ அவர்களின் சகோதரர் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றன.
போட்டிகளின் முடிவுகள் பின்னர் வெளியிடப்படும்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)