யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து சபை பேரூந்து ஊழியர்கள் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

0
149

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் மீது நடத்தப்படுகின்ற கல்வீச்சுத் தாக்குதல்களைக் கண்டித்து யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் மீது நேற்று வியாழக்கிழமை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் பருத்தித்துறை மந்திகை சந்திக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள தாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு அடிக்கடி நடத்தப்படுகின்ற தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வலியுறுத்தி சாரதிகள் மற்றும் நடத்துனர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதலை கண்டிக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளில் ஒட்டப்பட்டுள்ளன.

கல்வீச்சுத் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here