பிரான்சு துலூஸ் நகரில் கேணல் பரிதி மற்றும் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்-2024

0
98

துலூஸ் பிராங்கோ தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த “தமிழர் விளையாட்டு விழா 2024 ” மற்றும் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் கடந்த 20.10.2024 ஞாயிற்றுகிழமை Gironis. மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

அல்பி மற்றும் துலூஸ் வாழ் தமிழ் உறவுகள் இந்த விளையாட்டு விழாவில் பங்குபற்றினார்கள்.அகவணக்கத்தினை தொடர்ந்து தமிழ் சங்க வளர்ச்சிக்காக அயராது உழைத்த கேணல் பரிதி மற்றும் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஆரம்பமாகின. சிறுவர் சிறுமியர்களுக்கான போட்டிகள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களுக்கான போட்டிகள் என அனைவரையும் போட்டிகளில் ஈடுபட வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகவும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் அனைவரும் பங்கேற்று வெற்றிக் கிண்ணங்களையும் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பரிசளிப்பு வைபவத்துடன் துலூஸ் தமிழர் விளையாட்டு விழா 2024 நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.


இந்தப் போட்டிகளை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு இணை அனுசரணை வழங்கிய வர்த்தக நிறுவனங்களுக்கும் , அன்பளிப்புகளை அளித்த எமது உறவுகளுக்கும் அனைத்து வழிகளிலும் உதவிய அனைவருக்கும் துலூஸ் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து வீர வீராங்கனைகளுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். உங்களுடைய திறமைகளை வெளிக்கொணர தமிழ்சங்கம் எப்போதும் முன் நிற்கும் எனவும் – போட்டியின்போது மைதான ஒழுங்குபடுத்தல்கள். வாகன போக்குவரத்து உதவிகள் , கூடார அமைப்பு என அனைத்து வழிகளிலும் உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் எனவும்- தெரிவித்த துலூஸ் பிராங்கோ தமிழ் சங்கம்
இந்த தமிழர் விளையாட்டு விழா 2024 நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிவடைவதற்காக கடந்த 1 மாத காலமாக அனைத்து ஒழுங்குகளுக்குமான சரியான திட்டமிடல்களுடன் அயராது உழைத்த துலூஸ் தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர்களுக்கும்
தனது நன்றியறிதலைத் தெரிவித்துள்ளது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here