கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் கனடா மார்க்கம், ஒன்ராறியோவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது-44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்தே நேற்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.