பிரான்சு மாவீரர் பணிமனை பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு:-
எங்கள் உயிரிலும் மேலான பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு!
மாவீரர் பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தோருக்கும் பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்!
தமது சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து அந்த சத்திய இலட்சியத்திற்காக சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27.
எமது தேசத்தின் தேசிய நாளான தேசிய மாவீரர் நாள் 2024 பிரான்சில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இப் புனிதர்களின் நன்நாளில் மாவீரர் குடும்பங்களால் எம்மிடம் கையளிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் திருவுருவப்பட ங்களுக்கு சுடர் ஏற்றியும் மலர்கொண்டும் (2024 நவம்பர் 27ம் நாள் புதன்கிழமை) பக்கம் செலுத்தவுள்ளோம்.
இதேவேளை, இதுவரை தமது பிள்ளைகளின் சகோதரர்களின் திருவுருவப்படங்களைத் தராதவர்கள் அம் மாவீரர்களின் திருவுருவப் படங்களையும், விபரங்களையும் உடன் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றதோடு, இதுவரை எம்மோடு தொடர்புகளில் இருந்த மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது தொலைபேசி இலக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் அவற்றைத் தந்துதவுவதோடு, எம்முடன் 30.10. 2024 இற்கு முன்பாக தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி!
தொடர்புகளுக்கு -மாவீரர் பணிமனை-பிரான்சு
06 10 73 50 18-06 13 06 20 29
மேலதிக தொடர்புகளுக்கு:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு
01 48 22 01 75 – 06 29 16 25.41
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.