இஸ்ரேலிய தலைநகர் மீது ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட ரொக்கட் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காசாவின் கான் யூனிஸ் பகுதியிலிருந்து ஐந்து ரொக்கட்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்டதை ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்துள்ளது.
இதேவேளை இரண்டு இஸ்ரேலிய படையினருக்கு எதிராக ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பும் குறிப்பிட்டுள்ளது.
தென்லெபனானின் மருன் அல் ரஸ் பார்க் -ஜல் அல் அலாமில் இஸ்ரேலிய படையினரை இலக்குவைத்ததாக ஹிஸ்புல்லா அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.