பிரான்சில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு இலட்சம் படையினர் !

0
156

பிரான்சில் நாடு முழவதும், அவசரகாலத் தடைச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலைலயில் கொண்டாடப்படும் முதற் புத்தாண்டு இதுவாகும். இதனால் நாடு முழுவதும் உள்ள, பயங்கரவாதத் தாக்குதல் அச்சறுத்தலினால், 100.000 காவற்துறையினரும், ஜோந்தார்மினரும், இராணுவத்தினரும் நாடு முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்ஙகளிற்கான பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ஐரோப்பியத் தலைநகரங்கள் அனைத்திற்கும், தயேஷ், பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், நாம் இந்த வலுவான, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்’ என உள்துறை அமைச்சர் பேர்நார் காசநெவ் தெரிவித்துள்ளார்.

36 நகரும் படையணிகளில் இருந்து 39,500 தொண்டர் தீயணைப்புப் படைவீரர்களும் இன்றிரவிற்கான கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

20.000 காவற்துறையினர் வீதிப் பாதுகாப்புகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பரிசிற்கும் பரிசைச் சுற்றியுள்ள புறநகர்ப்பகுகளிற்குமான பாதுகாப்பிற்காக மட்டும், 11.000 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here