இஸ்ரேல்மீது ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்!

0
103

 இஸ்ரேல் மீது ஈரான்  தொடர்ச்சியாக  ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

 ஈரான் 180 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தியது இவற்றில் பலவற்றை செயல்இழக்க செய்துவிட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய நகரங்களின் மேல் பல ஏவுகணைகளை பார்த்தோம் என தெரிவித்துள்ள சிஎன்என் செய்தியாளர்கள் வான்பாதுகாப்பு எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருந்தன என குறிப்பிட்டுள்ளனர்.

 இஸ்ரேலின் விமானதளமொன்று தாக்கப்பட்டது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

  ஈரான் இன்றிரவு பாரிய தவறிழைத்துள்ளது என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஈரான் அதற்கான விலையை செலுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here