பிரான்சில் சிறப்படைந்த 25 ஆவது தமிழர் விளையாட்டு விழா – 2024

0
135

பிரான்சில் கடந்த 25 ஆண்டுகளாக பிரான்சு மனிதநேய அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழம் நடாத்தி வரும் ” கோடைகால தமிழர் விளையாட்டு விழா பல்லாயிரம் தமிழ் மக்கள் பல்லின மக்கள், அரசபிரமுகர்கள், அனைத்து தமிழர் கட்டமைப்புக்கள்,விளையாட்டுக்கழகங்கள் வீரர்கள், வர்த்தகர்கள்,ஊடகவியலாளர்கள், இன உணர்வாளர்கள், குறிப்பாக இளையோர்களின் பங்கெடுப்புடன் சிறப்புடன் நடைபெற்றது.

வழமையான L’Aire des Vents Dugny திடலில் காலை 10.00 மணிக்கு முழவுவாத்திய இசைமுழங்கி அணிவகுத்து வர இறந்துபோன அனைத்து உயிர்களுக்குமான பொதுவான பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ்இனத்தின் தமிழீழ தேசத்தின் அடையாளமான தமிழீழ தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டது. இதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட தமிழீழ வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கலைகளில் ஒன்றான இன்னியம் இசைஅணியுடன் தமிழர் விளையாட்டுவிழா வந்திருந்த அரச பிரமுகர்கள், மாநகர முதல்வர்கள், அனைத்து தமிழர் கட்டமைப்பின் பிரதிநிதிகள், தேசப்பணியாளர்கள், அழைத்து வரப்பட்டு பொதுவான நினைவுத்தூபியில் மலர் வணக்கம் செய்யப்பட்டு பிரெஞ்சு, ஐரோப்பிய, புனர்வாழ்வுக்கழக கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. வந்திருந்த பிரெஞ்சு பிரமுகர்கள் கொடிகளை ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து அத்திடலில் திட்டமிட்டதன் படி விளையாட்டுப்போட்டிகள் (சிறுவர், பெரியவர்கள், பெண்களுக்கானது ) நடைபெற்றன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளான தாச்சிப்போட்டி, முட்டியுடைத்தல், கயிறிழுத்தல் , தலையணைப்போட்டி, சங்கீதக்கதிரை, குறிபார்த்துச் சுடுதல், சிறுவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.
கலைப்பகுதியினர் தாயகப்பாடல் போட்டிகளையும், வர்த்தகர்கள் மலிவுவிலை மளிகைப் பொருட்களையும்,நல்வாய்ப்பு சீட்டுக்களையும், வெளியீட்டுப்பிரிவினர் தாயக நினைவுப்பொருட்களையும், மனிதநேய உதவி அமைப்புகள் தமது தேசம் நோக்கிய பணிகள் பற்றிய விளம்பரங்களையும், ஊடகங்கள் போட்டி நிகழ்வுகளையும், ஊடக ஒலிபரப்புகளையும் நடாத்தியிருந்தனர். யவுளிக்கடையினர் சேலைகள், ஆபரணங்களை விற்பனை செய்திருந்தனர்.
சிற்றுண்டிச் சாலையில் அறுசுவை உணவுகள் தமிழீழ உணவகத்தால் வழங்கப்பட்டது. பெரியவர்கள், குழந்தைகள், இளையவர்கள் விரும்பி உண்டு மகிழ்ந்தனர்,
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளனத்தின் ஆதரவுடன் கடந்த மாதமளவில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியிலும், துடுப்பெடுத்தாட்ட போட்டியிலும் வெற்றிபெற்ற கழகங்களுக்கும், வீரர்களுக்கும், மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here