யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பெய்த கடும் மழை கார ணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
தென்மராட்சியில் நேற்று முன் தினம் தொடக்கம் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாகவும், இதன்கார ணமாக தொற்றுநோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி த்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகி யுள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 103.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கோவில் காடு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வீசிய பலத்த காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு வீசிய பலத்த காற்றினால் சேதமடைந்த வீடுகளில் வசித்த மக்கள் தற்போது உறவினர் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.