பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் தியாக தீபம் நினைவாலய முன்னிலையில் இன்று காலை 10 மணியளவில் உண்ணாவிரதம் ஆரம்பமானது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில்
ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து மாலை 17.00 மணிவரை குறித்த உண்ணாவிரதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை 14.00 மணிக்கு பொதுச் சுடர் தேசியக்கொடியேற்றல்களுடன் வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)