புவி வெப்பமயமாதலே இயற்கை பேரிடர்களுக்கு மூலகாரணம்!

0
11

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாவிட்டால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் உள்ளதாக உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் அதிக மழை கட்டுக்கடங்காத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம் என பல்வேறு இயற்கை பேரிடர்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஜெனீவாவில் உலக வானிலை ஆராய்ச்சி மையத்தின் பொது செயலாளர் செலஸ்டி சாலோ, செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்போது புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்காவிட்டால் இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது என சுட்டிக்காட்டினார்.

உலக அளவில் கடந்த வருடம், அதிக வெப்பநிலை பதிவாகியது. இந்த வருடத்தில் முதல் 8 மாதங்களிலும் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்து இருந்ததாகவும் செலஸ்டி சாலோ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here