மானிப்பாய் பகுதியில் உள்ள அழகு சாதன விற்பனை நிலையத்தில் அழகுசாதன பொருட்களை திருடிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்
மானிப்பாயில் உள்ள அழகுசாதன விற்பனை நிலையத்தில் கடந்த 23 ஆம் திகதி பொருட்கள் வாங்குவதற்கென கடைக்குள் சென்ற 4 பெண்கள் பெறுமதி மிக்க பொருட்களை களவாடிச்சென்றுள்ளர் குறித்த சம்பவம் கடையில் உள்ள சீசீடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
அதை பார்வையிட்ட கடை ஊழியர்கள் 4 பேர் குறித்த பெண்களை அடையாளம் கண்டபின்னர் நேற்று முன்தினம் அவர்களின் வீட்டுக்கு சென்று அவர்களை மானிப்பாயில் உள்ள கடைக் கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் சாவகச்சேரியை சேர்ந்த 2 பெண்களும் சுன்னாகத்தை சேர்ந்த 2 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் என பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் குறித்த இடத்துக்கு வந்து 4 பெண்களையும் அவர்களை விசாரணை செய்த 4 ஆண்களையும் நேற்று முன்தினம் கைது செய்துள்ளார்.
இவர்களை நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்திய போது 4 பெண்களையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் பெண்களை விசாரணை செய்ததற்காக 4 ஊழியர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.