பிரான்சில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஓர் நகரமான ஆர்ஜெந்தே நகரில் ( PARC DU CERISIER) என்னும் இடத்தில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுக்கல்லின் முன்பாக 15.09.2024 காலை ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு மலர் கொண்டு வணக்கம் செலுத்தப்பட்டது. தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டின் நினைவுகளை நெஞ்சிலே சுமந்து ஆர்ஜெந்தே வாழ் தமிழ்மக்கள், தமிழ்ச்சோலை மாணவர்கள், மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கட்டமைப்புப் பொறுப்பாளர்கள் மாவீரர் பணிமனை செயற்பாட்டாளர்கள், மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டுப்பற்றாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
இன்றைய உன்னதனின் நினைவு நாளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிதிப்பங்களிப்பு அட்டையை வைபவரீதியாக வெளியிட்டிருந்தது. அதனை மாவீரர், மற்றும் நாட்டுப்பற்றாளர்கள், தாயகச்செயற்பாட்டாளர்கள் பெற்று கொண்டனர்.
தொடர்ந்து வரும் 26 ஆம் நாள் வரை காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படவுள்ளது. தியாக தீபம் தன்னுயிரை ஈகம் செய்த செம்; 26 நாள் ( வியாழக்கிழமை ) காலை 10.00 மணி முதல் 17.00 மாலைவரை அடையாள உண்ணாநோன்பும் மேற்கொள்ளப்படுவதுடன் மாலை 2.00 மணி முதல் தேசியக் கொடியேற்றலுடன் வணக்க நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வழமைபோன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனையுடன், பிராங்கோ தமிழ்ச்சங்கம் ஆர்ஜெந்தே மற்றும் ஆர்ஜொந்தே இளையோ அமைப்பும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஊடகப்பிரிவு – மக்கள் தொடர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு