வடமராட்சி வதிரிப் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த நான்கு பேர் அடங்கிய முகமூடி அணிந்த கொள்ளையர் கூட் டம் அங்கிருந்த சுமார் 129 பவுண் பெறு மதியான தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக நெல்லியடி பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வதிரியிலுள்ள யோ.சிந்துஜன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி சுமார் 3 1/2 பவுண் தங்க நகைகளையும்த டோச் லைட் மரம் அரியும் வாள் மற்றும் சைக்கிள் என்பவற்றை எடுத்துச் சென் றுள்ளனர்.
அங்கு திருட்டு வேலையை முடித்துக் கொண்ட நால்வர் அடங் கிய அக் கொள்ளையர் குழு பின்னர் இரவு 11.30 மணியளவில் அதே இடத்தைச் சேர்ந்த சி.யசோ தினி என்பவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளது.
அங்கு இருந்தவர்களை ஆயுதம் காட்டி அச்சுறுத்திய முகமூடிக் கொள்ளையர் குழு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 125 1/2 பவுண் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
இதே வேளை சிந்துஜன் என்ப வரின் வீட்டில் திருடப்பட்ட சைக் கிள் வடமராட்சி கிழவி தோட்டத் தில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி விட்டு அங்கிருந்த மோட்டார் சைக் கிள் ஒன்றை திருடிச் சென்றுள்ள னர்.
இதேவேளை திருடிய மோட் டார் சைக்கிள் வல்லைப் பகுதி யில் இருந்து நேற்று மீட்கப்பட்ட தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத் திருட்டுச் சம்பவங்கள் தொடர் பாக மோப்பநாய்த மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட் டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் விசா ரணைகளை மேற்கொண்டுள்ள நெல்லியடிப் பொலிஸார் சந்தேகத்திற்கு இடமான முறையில் யாரும் நடமாடினால் உடனடி யாக 021 – 226 3222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரி யப்படுத்துமாறு கோரியுள்ள னர்.
வடமராட்சியில் இடம்பெறும் தொடர் திருட்டுக்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ள னர்.