பிரான்சில் “நடைமுறைத் தமிழ் வழிகாட்டி” என்னும் அகரமுதலி மீள் வெளியீடு!

0
177

நடைமுறை அரசுகால தமிழ்ப் பணியின் நீட்சி !
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக தமிழியல் பட்டகர்களால் நடத்தப்படும் தியாகதீபம் அறிவாய்தல் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் 1993 இல் தொகுத்து வெளியிடப்பட்ட நடைமுறைத் தமிழ் வழிகாட்டி என்னும் அகரமுதலி தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் மீள் வெளியீடு செய்யப்படவுள்ளது.

தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு எட்டாவது ஆண்டாக எதிர்வரும் செப்டம்பர் 15 அன்று, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.01 மணிக்கு
Bourse du travail.
9-11 Rue Genin
93200 Saint-Denis

எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வழமைபோன்று ஆய்வு நூல் வெளியீடும் இடம் பெறவுள்ளது.


தமிழீழ நிழலரசு கால மொழியியல் கொள்கையில் ஒன்றான தூய தமிழ்ப் பயன்பாட்டை மக்கள் வயப்படுத்தல் என்ற அடிப்படையில் வெளியிடப்பட்ட மேற்படி நூலானது அக்காலப்பகுதியில் தமிழியல் அறிஞர்களின் கைநூலாக இருந்தது.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் மொழியியல் செயற்பாடு, அக்காலத்தில் மக்களால் பெருதும் போற்றிப் பின்பற்றப்பட்டு வந்தது யாவரும் அறிந்ததே. அதன் நீட்சியாக புலப்பெயர்வு தேசங்களில் தூயதமிழ்ப் பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.
இவ்வாறான அகராதிகள் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்துகொண்டிந்த நிலையில், ஈழத்தில் முதன்முதலாக தமிழ் வளர்ச்சிக்கழகத்தால் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தது மட்டுமல்லாது நாளாந்த நடைமுறைக்கு தூய தமிழ்ப் பயன்பாட்டைக் கொண்டுவரும் நடவடிக்கைகளையும் நிழலரசு மேற்கொண்டிருந்தது.
ஈழத்து மொழி வழக்கில் கலந்திருந்த வேற்றுமொழிச் சொற்களுக்கு நிகரான தூயதமிழ்ச் சொற்களை இவ்வகராதி கொண்டிருப்பது, எமக்கான ஓர் அகராதி என்ற பெருமிதத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.
எமது தேசத்து அறிஞர்களால் தொகுக்கப்பட்டு எமது நிழலரசால் வெளியிடப்பட்ட நடைமுறைத் தமிழ் வழிகாட்டி எம்மவர் ஒவ்வொருவர் வீடுகளிலும் இருக்க வேண்டிய ஈழத்து அகராதி என்றே சொல்லலாம்.
எமது விடுதலை நோக்கிய போராட்டத்தின் ஒரு கூறாகிய மொழி மீட்சியின் நீட்சியாக மேற்கொள்ளப்படும் இந்நூல் மீள் வெளியீட்டுக்கு உழைத்த ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here