பிரான்சில் 8வது ஆண்டாக இடம்பெறும் தியாக தீபம் தமிழியல் அறிவாய்தல் அரங்கு!

0
264



தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தமிழியல் இளங்கலைமாணிப் (BA) பட்டகர்களால் நடாத்தப்படும் தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு எட்டாவது ஆண்டாக எதிர்வரும் செப்டம்பர் 15 அன்று, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.01 மணிக்கு
Bourse du travail.
9-11 Rue Genin
93200 Saint-Denis

எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வழமைபோன்று ஆய்வு நூல் வெளியீடும் இடம் பெறவுள்ளது.


பட்டகர்கள் பல்வேறுபட்ட தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றைத் தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பு இருந்த காலப்பகுதியில் அவரின் பெயரால் நடத்தப்படும் அறிவாய்தல் அரங்குகளில் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் இந்த ஆய்வுக்கட்டுரைகள் தமிழ், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.


இது தமிழின ஆய்வுத்தளத்தின் அறிவியல் பாய்ச்சலின் படிமலர்ச்சியாகக் கொள்ளப்படுகிறது. இவ்வாய்வுகள் தமிழர் கல்வியியற் குமுகம் மட்டுமல்லாது பிரான்சு கல்வியியற் குமுகத்திலும் அரசியல், மொழி, பண்பாடு, குமுகம், பெண்ணியல், பொருண்மியம் சார்ந்த ஆய்வுத் தரவுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு முதன் முறையாக பிரான்சின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிலும் இளம் தலைமுறை ஆய்வாளர்கள் தமது துறைசார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

இதேவேளை 1993 இல் தொகுத்து வெளியிடப்பட்ட நடைமுறைத் தமிழ் வழிகாட்டி என்னும் அகரமுதலி தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் மீள் வெளியீடு செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here