வட மேற்குப் பாகிஸ்தானில் அரசாங்க அலுவலகமொன்றின் பிரதான நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரியொருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை என்ற போதும் தலிபான் தீவிரவாதிகளே காரணம் என நம்பப்படுகிறது.
மேற்படி தாக்குதலில் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானவர்களது தொகையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் பிராந்திய மருத்துவ தலைமையகத்தைச் சேர்ந்த மருத்துவர்களில் ஒருவரான அலி கான், இந்தத் தாக்குதலில் 40 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.