9 ஆம் நாளில் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா. நோக்கிய ஈருருளிப் பயணம் பிரான்சு Schiltigeim நகரில் ஆரம்பம்!

0
182

மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் நெதர்லாந்தில் ஆரம்பமான ஈருருளிப் பயணமானது,எழுச்சியோடு பயணித்து பெல்சியம் நாட்டினை ஊடறுத்து பல சந்திப்புக்களோடு பயணித்து,luxemburg மாநகரம்,வெளிவிவகார அமைச்சில் மனுக்கைளிக்கப்பட்டு,யேர்மனி நாட்டிற்குள் பயணித்து,Dillingen, Saarbrücken நகரங்களை ஊடறுத்து சந்திப்புக்கள் மற்றும் மனுக்கையளிப்புக்களைத் தொடர்ந்து Landau மாநகரிலிருந்து karlsruhe நோக்கிப் பயணித்து மாலை நிறைவடைந்தது.8 ஆம் நாளாகி நேற்று,காலை 9மணியளவில் karlsruhe மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமான ஈருருளிப் பயணமானது,பிரான்ஸ் எல்லையினைக் கடந்து Rheinau நகரினைச் சென்றடைந்து, தொடர்ந்தும் பிரான்சிற்குள் பயணித்து
Schiltigeim நகரில் நிறைவடைந்தது.

இன்று 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு Schiltigeim நகர மண்டபம் முன்பாக அகவணக்கத்தோடு ஆரம்பமாகித் தொடர்கிறது.

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதியினை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு வேண்டும் என்ற கொட்டொலிகளோடு பயணிக்கும் இவ்வெழுச்சிப் போராட்டத்தில் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வேணவாவினை உரமேற்று மக்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் இணைந்து கொள்ள அழைக்கிறோம்.

எதிர்வரும் 57 வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலே வாழிட நாடுகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து  தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை  அவசியம் என்னும் நிலைப்பாட்டினை ஏற்க நாம் அயராது போராட வேண்டும்,  அதற்கமைய எம் உறவுகளே உங்களுடைய வாழிட நாடுகளை எமது நியாயமான கோரிக்கை செவிசாய்க்க வைப்பது எம் அனைவரினதும் வரலாற்று கடமையாகும் எனவே எம் விடுதலைப் பங்களிப்பினை ஆற்ற வாருங்கள். 

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது”

  • தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன். 

“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here