யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ.லெனின்குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலக்கம் ஐந்து, ஆறு மற்றும் பத்தாம் இலக்க சந்தேகநபர்களான சந்திரகாசம்,துஷாந்தன், பியவர்தன ராஜ்குமார் ஆகிய மூவரையும் கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏனைய சந்தேகநபர்களை வவுனியாவில் தடுத்து வைக்குமாறும் நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
யாழ் புங்குடு தீவில் கூட்டு பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 13 ஆம் திகதி மாணவி வித்தியா சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து மாணவி வித்தியாவின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படடமை குறிப்பிடத்தக்கது.