யாழ். செம்மணியில் இடம்பெற்ற கிருசாந்தி குமாரசுவாமி படுகொலையின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
37

சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மாணவி கிருசாந்தி குமாரசாமி உள்ளிட்ட செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து செம்மணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று 07.09.2024 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

28 ஆண்டுகளுக்கு முன்னர் காவலரண் ஒன்றில் அவர் சிறீலங்கா இராணுவத்தினரால் வழி மறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். பின்னர் படையினரால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டார்.
இவரோடு ஆயிரக் கணக்கானோர் புதைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here