எமது அடுத்த சந்ததியில் எமக் கான அடையாளங்கள் அனைத் தும் பறிக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்தை உணர்ந்து கொண்டதன் காரண மாகத்தான் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
அதை சரியான முறையில் புரிந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத் திய நிபுணர் பூ.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது அமர்வு நேற்றையதினம்
யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமர்வின் முடி வில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்ததார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமதுபேரவையின் முதற்கட்ட வேலைத்திட்டமாக அரசியல் தீர்வு தொடர்பான உப குழு அமைக்கப்பட் டுள்ளது. இவ் உப குழு கட்டமைப் பானதுமுதலமைச்சர் சார்பாக இரு வர், அரசியல் கட்சிகள் சார்பாக 2 பேர் சமூகஅமைப்புகள் சார்பாக 5 பேர் முன்மொழியப்படுவார்கள், 15 பேர் கொண்ட உப குழு தனது வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும். அரசியல் தீர்வு தொடர்பான விஞ்ஞான பூர்வமான ஒரு ஆவணத்தை முன்வைப்பதுதான் இதன் நோக்க மாகும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுஎப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பான திட்டத்தை மக்களின் பங்களிப்பு டன் எமதுகுழுவினர் முன்வைப்பார்கள்.
அத்துடன் ஆலோசனை வழங்கு வதற்காக வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள அரசியல் நிபுணர்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதற் காக 5 அங்கத்தவர்கள் கொண்ட ஆலோசனை சபை ஒன்று அமைக்கப்படவுள்ளது.
அடிமட்டமக்களிடம் இருந்து அவர்களின் அபிலாசைகளை பிரதி பலிக்கும் தீர்வுதிட்டம் இருக்கவேண் டும் என்பதுஎம் எல்லோருடைய ஆசையாக இருக்கிறது அதற்காக எமது பேரவையால் சிலமுன்முயற்சிகளை எடுக்கவுள்ளோம்.
நிபுணர்குழு அமைக்கப்பட்டு அரசியல் தீர்வில் உள்ளடங்கக் கூடிய முக்கியமான அம்சங்களை உள் ளடக்கியதான அறிக்கையை தயாரிக்கவுள்ளோம் அது பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு மக் களுக்கு வெகுவிரைவில் தெரிவிக் கப்படும்.
சமூக அமைப்புக்களை பிரதி நிதித் துவப்படுத்துகின்றவர்கள் தான் இப் பேரவையில் அதிகமாகவுள்ளனர். அவர்கள் மூலமாக அடிப்படை வரைபை மக்கள் முன்னிலையில் எடுத்துச் சென்று மக்களின் ஆலோ சனைகளை பெற்று மக்களின் தேவைகளை உள்வாங்கி இறுதி ஆவணத்தை மிகவிரைவில் தயா ரிக்கவுள்ளோம்.
அத்துடன் இப் பேரவையில் முஸ் லிம் மக்கள் தனித்துவ மானவர் கள். அவர்கள் அரசியல் தீர்வை தீர் மானிக்கவேண்டியவர்களில் முக் கியமானவர்கள் அவர்களை எவ் வாறு உள்வாங்குவது என்பது தொடர்பாக உப குழு ஆராயவுள்ளது. அதுமிகவும் சவாலானது. எமது வெற்றியும் அதிலேதான் தங்கியுள்ளது.
முன்னையகாலங்களில் பல சிவில் அமைப்புகள் உருவாகி இயங் கிக்கொண்டு இருந்தன. யுத்தம் முடிவடைந்த பின்னரும் பல அமைப் புக்கள் இயங்கிவந்தன.
இப்படியான சூழலில் எமது அரசி யல் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை அரசியல் வாதிகளிடம் மட்டும் விட்டுவிடக்கூடாது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அமைப் புகளும் மக்களும் இணைந்துதான் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கோட்பாட்டின் அடிப்படையில் பல சிவில் அமைப் புக்கள் தோற்றம் பெற்றன.
2012,13 ஆம் ஆண்டுகளில் அரசி யல் கடசிகளையும் சிவில் அமைப் புகளையும் இணைத்து ஒரு தமிழ் தேசியபேரவை அமைப்பதற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அவைவெற்றியடைய வில்லை. சிவில் அமைப்புக்கள் மட்டும் இணைந்துதமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியதாக கருதக்கூடாது. பல அமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எமது நோக்கம் மிகவும் தெளி வானது எந்த விதமான அரசியல் கட்சியை சார்ந்தோ அல்லது அர சியல் கட்சியாக மாறவேண்டிய தேவையோ இல்லை இந்த அமைப் பினகட்டமைப்பில் இது அரசியல் கட்சியாகமாற்றம் அடைவதற்கான சாத்தியம் இல்லை. இதில் உள்ளவர்கள் பல அமைப்புகளை சார்ந்த வர்கள். அவர்களை இணைத்து கட்சியாக பரிணமிப்பது என்பது சாத்தியமற்றவிடயம்.
தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கவேண்டும். அந்தப் பொறுப்பை அரசியல் கட்சிகளிடம் மட்டும் விட்டுவிடக்கூடாது. ஏனெ னில் பாதிக்கப்பட்டது நாங்கள் எமக்கும் அதில் உரிமை உண்டு. கடந்த காலங்களில் எமது சொத்து இழப்புகளுக்கும், தியாகங்களுக்கும், உயிர் இழப்புகளுக்கும் சரியான தீர்வு ஏற்படவேண்டும் என்பது பற் றிசிந்திப்பது ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை அந்தக் கடமையை தான் நாம் செய்ய நினைக்கின் றோமே தவிர இதற்குஅரசியல் சாயம் பூசவேண்டாம். அரசியல் பின்னணி என்று கதைப்பது வேத னைக்குரியவிடயம்.
இது சமூக அமைப்புகள் மக் களின் தீர்வுபற்றிசிந்திப்பதற்கு இடை யூறாக இருக்கும். மக்கள் அனை வரும் அமைப்பாக உருவாகவே ண்டியதேவை உள்ளது, அதில் அனைவரையும் உள்வாங்கி உரு வாக்க வேண்டிய தேவை காணப் படுகிறது.
எனவே இந்த பேரவை ஆரம் பித்து ஒரு கிழமையில் அதை அழிக்க நினைப்பது வேதனைக் குரியவிடயம்.
மக்கள் நலனை கொண்டு நட வடிக்கை எடுக்க அனைவரின் ஒத் துழைப்பும் தேவை. நல்ல நோக் கத்துக்காக பல அமைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு இது. எமக்கான சரியான தீர்வு என்ன என்பதை மக்கள் மத்தியில் இருந்து வெளியில் கொண்டுவந்து அரசியல் தலைமைகளுக்கு முன் வைப்போம். அதை உள்வாங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண் டும். அவர்களுக்குபலமாக இருக் கத் தான் முயற்சிசெய்கிறோம். அதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவி