முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பில் தேடப்பட்டுவரும் பொலிஸ் அதிகாரியொருவர் அவுஸ்திரேலியாவில் ஒழிந்திருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் உள்ள சூழல் ஆலோசனை வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதாக சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.அமெரிக்க முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரிக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் ஒருவரே இந்த வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளராகக் காணப்படுகிறார்.
ரவிராஜின் படுகொலை தொடர்பில் தேடப்பட்டுவரும் பபியன் ரொய்ஸ்டன் என்ற நபரைக் கண்டுபிடிக்க உதவுமாறுஅவுஸ்திரேலிய பொலிஸாரின் உதவியை இலங்கை நாடியிருந்தைு. குறித்த பெயருடைய நபர் அவுஸ்திரேலியாவில் உள்ள சூழல் ஆலோசனை வர்த்தக நிறுவனமொன்றின் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றமையை அந்நாட்டின் பங்கு மற்றும் முதலீட்டு ஆணைக்குழு கண்டறிந்திருந்தது.
இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனினும்இ அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்திருப்பதால் கடந்த ஜனவரி மாதம் அவரை வேலையிலிருந்து நீக்கியதாகக் உரிமையாளர் கூறியுள்ளார். பபியன் ரொய்ஸ்டன் என்ற நபர் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வீசாவில் வந்துள்ளதாகவும்இ ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரவிராஜ் கொலையாளி அவுஸ்திரேலியாவில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அவுஸ்திரேலியாவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவருவதாக அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.