ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 15 ஆவது தடவையாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி இன்று (31.08.2024) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கார்லே கோணேஸ் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டுத்திடலில் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
முன்னதாக பொதுச்சுடரினை விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் சார்பில் சிவகுருநாதன் மதியழகன் ஏற்றிவைக்க, பிரெஞ்சுத் தேசியக்கொடியை 95 விளையாட்டுக்கழகப் பொறுப்பச் திரு.யூட் ரமேஸ் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரினை மாவீரர் லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து பிரான்சு உதைபந்தாட்ட சம்மேளனக் கொடியை அதன் செயலாலளர் உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றிவைக்க, பிரித்தானியா நாட்டுத் தேசியக்கொடியை பிரித்தானியா பாடும்மீன் வி.க. உறுப்பினர் திரு.கேதீஸ் அவர்கள் ஏற்றிவைக்க, சுவிசு நாட்டுத் தேசியக்கொடியை சுவிஸ் தெரிவு அணி பொறுப்பாளர் திரு.கந்தசாமி நந்தகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் மேத்தா அவர்கள். வெளிநாட்டில் இருந்து அழைப்பை ஏற்றுவந்த கழகங்களையும் வீரர்களையும் வரவேற்றதுடன் அனைத்துக் கழகங்களினதும் வீரர்களினதும் ஒத்துழைப்பை வேண்டிக்கொண்டார்.
தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் வீரர்களுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்திப் போட்டிகளை ஆரம்பித்துவைத்தனர்.
வளர்ந்தோர் பிரிவு, 15 வயதின் கீழ் பிரிவு என 14 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
சமநேரத்தில் இரண்டு மைதானங்களில் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றன.
15 வயதிற்கு கீழ் பிரிவில்
வளர்ந்தோர் பிரிவில் முதலாம் இடத்தை FC 93 அணியும் இரண்டாம் இடத்தை சென்பற்றிக்ஸ் அணியும் முன்றாம் இடத்தை யாழ்ட்டன் அணியும் பெற்றுக்கொண்டன.
நிறைவாக வெற்றிபெற்ற அணிகளுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக் கிண்ணமும் பதக்கமும் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தாரகமந்திரத்தோடு தேசியக்கொடிகள் மற்றும் சம்மேளனக் கொடி இறக்கப்பட்டன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)