யாழ் அரியாலைப் பகுதியில் இராணுவத் தேவைக்காக 3.6 ஏக்கர் தனியார் காணியைப் பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அம்பலப்படுத்தினார்.
நேற்று புதன்கிழமை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் தொடர்பில் அம்பலப்ப டுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அரியாலைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 8.6 ஏக்கர் காணி உள்ள நிலையில் அதில் 3.6 ஏக்கர் இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகிறது அதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த நல்லூர் பிரதேச செயலாளர் குறித்த பகுதியில் 3.6 ஏக்கர் காணியை எடுப்பதற்கான கோரிக்கை கிடைத்து எனப் பதில் அளித்தார்.