கனடியத் தமிழ் மக்களின் பல்வேறுபட்ட கேள்விகளிற்கும் தெளிவான பதில்களைப் பொறுமையாகத் தந்து மக்கள் மனதை ஈர்த்தார் சட்டத்தரணி சுகாஷ்!
மனிதஉரிமைச் செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவருமான அண்மையில் மறைந்த தோழர்
மிராஜ் மென்டிஸ் அவர்களிற்கு ஈகைச்சுடரேற்றி வணக்கம் செலுத்தி நிகழ்வு ஆரம்பமானது.
கனடாவிற்கு வருகை தந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷுடனான மக்கள் சந்திப்பில் பல மக்கள் ஐயங்கள் கேள்விகளோடு வந்திருந்தனர்.
கனடா வாழ் தமிழ் மக்களின் பல்தரப்பட்ட கேள்விகளிற்கும் நேர்த்தியான தெளிவான பதில்களை ஆளுமையாக ஆணித்தரமாக பணிவாக பொறுமையாக சுமார் 3 1/2 மணி நேரம் சளைக்காமல் சான்றுகளடிப்படையில் பதில் சொன்னார் சட்டத்தரணி சுகாஷ்.
தாய் மண்ணில் மக்கள் போராட்டங்களில் மக்களோடு மக்களாகக் களத்திலும் மக்களைக் காக்கும் சட்டப் போராட்டங்களில் சட்டவாளராகவும் போராடும் இனவுணர்வாளர் சட்டத்தரணி சுகாஷ் தாயகத்திலிருந்து கனடாவிற்கு வருகை தந்து பல மக்கள் சந்திப்புக்களை ஓய்வின்றி ஏற்படுத்திச் சந்தித்து வந்தார்.
நேற்றைய நாள் சந்திப்பில் அவருடன் தமிழ்த் தேசிய அரசியல் பற்றியும் தாயகச் சூழல் பற்றியும் தேர்தல், பொதுவேட்பாளர், ஒற்றுமை, ஏக இராச்சிய, எனப் பல விடயங்களைக் கேள்வி கேட்டுக் கலந்துரையாட கனடா வாழ் தமிழ் உறவுகள் வருகை தந்திருந்தனர்.
எதிர்மறைக் கேள்விகளையும் புன்னகையோடும் சகோதரத்துவத்தோடும் பொறுமையோடும் பணிவோடும் ஆழமான அறிஙாற்றலோடும் ஆளுமையோடும் கையாண்டு பதில் சொன்ன சுகாஷின் ஆளுமை அழகு பாராட்டுக்குரியது!
“கொள்கையினைக் குறியாகக் கொண்டு இனநலனைக் கருத்திலேற்று எம்மக்களிற்காக பல்வேறு அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு எம் மக்களிற்கு உண்மையாகத் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையில் தாயகத்தில் போராடி எம்மை அர்ப்பணித்து உழைக்க நாம் தயாராகவுள்ளோம்!
காலத்தைத் தவறவிட்டு பின் நீங்கள் வருந்தாமல் எம்மைப் பலப்படுத்தி இனத்தைக் காப்பாற்றுங்கள்!”
என அவர் சொன்னபோது விழிகள் பனித்தன!
தலைவர் காலமான பொற்காலத்தை தவற விட்ட இனவலி தினைவில் வந்து வாட்டியது!
இனியும் எம்மினம் பொய்களின் பின் ஓடாமல் உண்மைகளினை வெல்ல வைக்க உண்மையானவர்களை எம் பிரதிநிதிகளாக்கி ஒரினமாக இலக்கு நோக்கி அணி திரளாது போனால் “கடவுளே வந்தாலும் எம்முனத்தைக் காப்பாற்ற எவராலும் முடியாது!” என்ற உண்மை மனதை வாட்டியது!
உண்மைகளை இந்த மண் வாழ் தமிழினம் அறியக் கூடாது என நினைத்த சதிகாரச்்சூழ்ச்சிகளைக் கடந்து காற்றாக வந்து உண்மைகளை தடை உடைத்துப் பேசிய சுகாசிற்கு கனடா வாழ் உணர்வுள்ள தமிழர்களின் உயிர்ப்பான நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.