யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் கழிவொயிலால் பாதிக்கப்பட்ட நீரை குடிக்கலாமா குடிக்ககூடாதா என மத்திய மாகாண அரசுகள் மக்களுக்கு கூறவேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் சுண்ணாகம் பிரதான வீதியில் இப்போராட்டம் காலை 10 மணியளவில் இடம்பெற்றது
சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள மின் நிலையத்திலிருந்து பாதுகாப்பற்ற முறையில், வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில்கள் நிலத்தடி நீரில் கலந்துள்ளமை கடந்த காலங்களில் கண்டறியப்பட்டிருந்தது.
அண்மையில் வடமாகாண சபையினால் அமைக்கப்பட்ட நிபுனர் குழு வெளியிட்ட அறிக்கையில் சுண்ணாகம் நிலத்தடி நீரில் ஒயில் பதார்த்தம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் நீரை பருகலாமா என தெரிவிக்கப்படவில்லை
எனவே, குறித்த நீரை பயன்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பது தொடர்பில், தமக்கு சரியான பதிலைத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தே, குறித்த கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.