சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய வான்வளி தாக்குதலில் சிரிய கிளர்ச்சியாளர் அமைப்பின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மட்டுமல்லாமல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் Jayush al islam அமைப்பு பலம் பொருந்திய அமைப்பாக திகழ்ந்து வருகிறது.
இந்த அமைப்பில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர்கள் உள்ளனர். ஜஹ்ரன் அல்லூஸ் என்பவர் இந்த இயக்கத்தின் தலைவராக உள்ளார்.
டமாஸ்கஸ்ஸின் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பான்மையாக இடங்கள் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அமைப்பின் ரகசிய தலைமையிடம் டமாஸ்கஸில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி இப்பகுதியை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஜஹ்ரன் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இது தொடர்பாக ரஷ்யா சார்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கிளர்ச்சியாள அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளது சிரிய அமைதி பேச்சு வார்த்தையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தனது தாக்குதலை தொடங்கிய ரஷ்யா இதுவரை 5,240 முறை தனது தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் கடந்த வியாழன்று மட்டும் 189 முறை தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.