அன்போடு அழைக்கிறோம். அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
“தமிழ்த் தேசியம்” என்கிற சொல்லை முதன்முதலாக தமிழர் மண்ணில் விதைத்த மாபெரும் “மக்கள் தலைவன்” முந்திரி காட்டில் பிறந்து வளர்ந்து தமிழினத்தின் தலைநிமிர்வுக்காக தன்னுயிரை ஈகம் செய்த “முனை மழுங்கா மாவீரன்” தோழர் தமிழரசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்புகளாக இரண்டு நூல்கள் வெளி வருகிறது.
தோழர் தமிழரசன் அவர்களின் பிறப்பு முதல் மர்மங்கள் நிறைந்த அவரது இறப்பு வரையிலான பேரதிர்வு உண்மைச் சம்பவங்களை உணர்வு பெருக்கோடு தாங்கி வருகிற இந்நூல்களை மாவீரன் வீரப்பன் அவர்களை முதல் முதலாக சந்தனக்காட்டில் சந்தித்து பேட்டி எடுத்து இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்திய மூத்த ஊடகவியலாளர் பெ.சிவசுப்பிரமணியம் அவர்கள் நேரடி ஆய்வின் மூலம் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார்.
ஆகச்சிறந்த இவ்வரலாற்றுப் பெட்டகங்களை வெளியிடும் நிகழ்வு வருகின்ற
செப்டம்பர்-1
ஞாயிறு காலை 10:30க்கு
சென்னை சாலிகிராமம்
பிரசாத் லேப் பில்
நடைபெற இருக்கிறது.
தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பெரும்பற்று கொண்ட எம் உறவுகளாகிய நீங்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு கட்டாயம் கலந்து கொள்ளும்படி பேரன்போடு அழைக்கிறோம்.
வரவேற்புரை:
இயக்குனர் வ.கௌதமன்
தலைமை:
வழக்கறிஞர் இரா.சங்கரசுப்பு
முன்னிலை:
வழக்கறிஞர் கே.பாலு
நூல் வெளியிட்டு சிறப்புரை:
“செந்தமிழன்” சீமான்
வாழ்த்துரை:
இயக்குனர் வெற்றிமாறன்
நடிகர் சே.கருணாஸ்
உ.தனியரசு
இயக்குனர் கோபி நயினார்
கு.செந்தில் மள்ளர்
“தடா” ரஹீம்
குரு.மணிகண்டன்
“கார்ட்டூனிஸ்ட்” பாலா
ஏற்புரை:
பெ.சிவசுப்பிரமணியம்
நிகழ்ச்சி தொகுப்பு:
வழக்கறிஞர்
தமிழச்சி பிரிதாராஜன்
இவர்களோடு மதிப்புமிகு தமிழ் ஆளுமைகள் இன்னும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.
பேரன்போடு வரவேற்கும்,
பெ.சிவசுப்பிரமணியம்
வ.கௌதமன்
தொடர்புக்கு:
9443427327