பங்களாதேஷ் சிறையிலிருந்து 518 கைதிகள் தப்பியோட்டம்!

0
60

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில், சிறையில் உள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டு இருந்தார்.

இதனிடையே, கலவரம் காரணமாக ஷெர்பூர் சிறையில் உள்ள பாரிய சிறையில் மோதல் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் 518 கைதிகள் தப்பியுள்ளனர். தப்பியோடிய கைதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறைச்சாலை இந்தியா-வங்காளதேச எல்லையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லை பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here