தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள் மூன்றாவது நாளாக இன்று 27.07.2024 சனிக்கிழமை Centre sportif Nelson Mandela Avenue Paul Langevin 95200 SARCELLES விளையாட்டுத் திடலில் சிறப்பாக இடம்பெற்றது.
இப்போட்டிகள் கடந்த (20.07.2024 ) சனிக்கிழமை காலை 9.00, மணிக்கு Stade du Moulin Neuf. 06, AV. du Maréchal Juin 93600 AULNAY – SOUS – BOIS என்னும் இடத்தில் சிறப்பாக ஆரம்பமாகி மறுநாள் (21.07.2024) ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் தெரிவுப்போட்டியாக இடம்பெற்றது.
இன்று மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் நினைவுத்தூபிக்கான ஈகைச்சுடரினை மாவீரர் 2ஆம் லெப். இளந்தேவன் அவர்களின் சகோதரரும் சார்சல் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவருமான திரு.மத்தியாஸ் டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடந்த 26.12 .2007 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து கடும் மழைக்கு மத்தியில் போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.
இன்றைய தினம் மாவீரர் நினைவு சுமந்த கரபந்தாட்டப் போட்டிகளும் இடம்பெற்றன.
பிரான்சு தேசத்தில் உள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்களான
தமிழர் விளையாட்டுக் கழகம் 93,
தமிழர் விளையாட்டுக்கழகம் 94,
தமிழர் விளையாட்டுக்கழகம் 95,
அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம்,
நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகம்,
வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம்,
FC 93 விளையாட்டுக்கழகம்,
யாழ்டன் விளையாட்டுக்கழகம்ஆகியவற்றுக்கு இடையே போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.
நாளை 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகள் Centre sportif Nelson Mandela Avenue Paul Langevin 95200 SARCELLES என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது..