பிரான்சில் கிளிநொச்சி இளைஞர் காதலியின் தொலைபேசி நேரலையில் விபரீத முடிவால் உயிரிழப்பு!

0
110

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்சில் தொலைபேசியில் நேரலை காணொளியில் தனது காதலியின் முன்பாகவே விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவத்தில் யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த
பாலசுப்பிரமணியம் கிருசிகன் (வயது 31 ) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டுக்கு அகதி கோரிக்கை அமைவாக புலம் பெயர்ந்துள்ளார் .

இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இறுதி யுத்தத்தில் சகோதரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரின் சகோதரன் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் அவரின் உதவியுடன் குறித்த இளைஞர் பிரான்ஸ் நாட்டுக்கு வந்து 93 பிரிவில் சகோதரனுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தரகர் ஊடாக
நுவரேலியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது .

குறித்த இளைஞர் அதிகளவான பணத்தை கொடுத்து பெண் விரும்பும் தேவைகளையும் நிறைவு செய்து வந்துள்ளார். இறுதியாக பெருந்தொகை லட்சம் ரூபா பணம் குறித்த பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது.

அதனைப் பெற்றுக் கொண்ட பெண் தனது சகோதரியின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளதாகவும் இவ்வாறு பல தேவைகளைநிறைவேற்றியும் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றும் வந்துள்ளனர் கடந்த 23-07-2024 அன்று இளைஞருக்கும் பெண்ணுக்கும் இடையில் தொலைபேசி நேரலை காணொளி அழைப்பில் கருத்து முரண்பாடு வந்து காதலி கண்முன் இளைஞர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவம் தொடர்பாக இளைஞரின் குடும்பத்தினர் கிளிநொச்சி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறான மோசடிகளால் பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அவதானமாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here