பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்: பாதுகாப்பு உச்சம்!

0
101

இன்று ஜூலை 26, வெள்ளிக்கிழமை பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின்றன. ஒலிம்பிக்கின் ஆரம்ப நாள் நிகழ்வுகள், ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் இடங்கள், தலைநகர் பரிஸ் என ஒட்டுமொத்த இல் து பிரான்ஸ் மாகாணமும் மிகுந்த விழிப்புடன் உள்ளது. தலைநகர் உட்பட பிரான்சு முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் காவல்துறையினர், ஜொந்தாமினர், சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர் உட்பட 45,000 பாதுகாப்பு பிரிவினர் இன்று கடமையில் ஈடுபட உள்ளனர். அவர்கள் தவிர, மருத்துவக்குழுவினர், நோயாளர் காவு வண்டிகள் என அனைத்தும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நாட்களில் 30,000 பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுபடுவார்கள்.

அதேபோல் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டு சீருடையுடன் கடமையில் ஈடுபடுவார்கள்.

முதலில் ஆரம்ப நாள் நிகழ்வுக்கு 600,000 பேர் வரை கலந்துகொள்ளக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் அவை 326,000 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.


அதேவேளை, பல்வேறு மெற்றோ மற்றும் RER நிலையங்கள் இன்று மூடப்படுகின்றன.

ஒன்பதாம் இலக்க மெற்றோ Exelmans தொடக்கம் Saint-Philippe du-Roule நிலையம் வரை மூடப்படுகிறது. ஆறாம் இலக்க மெற்றோ Charles de Gaulle – Etoile தொடக்கம் Dupleix நிலையம் வரை மூடப்படுகின்றன.

Champs-Élysées–Clémenceau நிலையம் இன்று நாள் முழுவதும் மூடப்படுகின்றது.

மேலும், சென் நதிக்கு அருகே உள்ள Quai de la Rapée, Pont Neuf, Châtelet, Pont Marie, Sully-Morland, Cité மற்றும் Invalides ஆகிய நிலையங்களும் மூடப்படுகின்றன.

ட்ராம்களில் T2 சேவை Suzanne Lenglen தொடக்கம் Porte de Versailles வரை தடைப்படும்.

T3a சேவை Porte de Versailles நிலையத்தில் நிறுத்தப்பட மாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here