வெற்றிகொண்ட நாட்டை பின்தள்ள இடமளியேன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மஹிந்த

0
120

Mahindaவெற்றிகொண்ட நாட்டை பின்­தள்ள ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டேன். தேசத்தை கட்­டி­யெ­ழுப்பும் பல எதிர்­பார்ப்­புக்களை கொண்ட புது வருட பிறப்பை வர­வேற்­கிறேன். அத்­த­கைய பிரார்த்­தனையுடனும் வெற்றிகொள்ளும் தியா­கத்­துடனும் புது வரு­டத்தில் காலடி எடுத்து வைப்­பது பெரும் அதிர்ஷ்­ட­மாகும் என ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்­துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, கடந்து சென்ற வருட ஆரம்­பங்­களில் நமது பிரார்த்­தனை  ஒவ்­வொன்­றையும் நிறை­வேற்ற எம்மால் முடிந்­தது. கடந்து பத்து வரு­டத்தில் பிர­தே­சத்தை கட்­டி­யெ­ழுப்ப எம்மால் முடிந்­தது. நாட்டை பாது­காப்­பதே எமது பாரிய பொறுப்­பாகும். அதனை நிலை­நாட்­டு­வதில் பாரிய சவால்­க­ளுக்கு எமக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

பெரும் தியா­கத்­துடன் தோற்­க­டிக்­கப்­பட்ட இன­வாதம் மீளவும் வேறு வித­மாக தலை நிமிர்ந்து வரு­கி­றது. இன­வா­தத்தை போஷிப்­ப­தற்கு துணை­யாக உள்ள வைராக்­கி­ய­மான அர­சி­யலில் இருந்து விடு­ப­டு­வதே எமது பிரார்த்­த­னை­யாக இருக்க வேண்டும். தேசிய ஒற்­று­மையை கொண்டு நாட்டின் தனித்­து­வத்தை போற்றும் ஐக்­கிய தேசத்தை உரு­வாக்க வேண்டும்.

பொறுப்­பு­டனும் எவரும் அதிர்ஷ்­டத்­துடன் வெற்றி கொண்ட நாட்டை பாது­காத்து உலகை வெற்றி கொள்­வதே எமது பிரார்த்­தனை. இவ்­வ­ருட பிறப்பை தேசத்தின் வெற்றிமிகு வருடமாக மாற்ற நாட்டு மக்கள் அனைவருக்கும் தைரியம் ஏற்பட வேண்டும் என பிராத்திக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here