பிரான்சில் இரண்டு நாட்கள் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த தெரிவுப்போட்டிகள்!

0
193

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த (20.07.2024‌ ) சனிக்கிழமை காலை 9.00, மணிக்கு Stade du Moulin Neuf. 06, AV. du Maréchal Juin 93600 AULNAY – SOUS – BOIS என்னும் இடத்தில் சிறப்பாக ஆரம்பமாகி மறுநாள் (21.07.2024) ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் தெரிவுப்போட்டியாக இடம்பெற்றது.

முதல்நாள் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடந்த 11.07.1992 அன்று வவுனியா செட்டிக்குளம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். நாயகன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

இரண்டாம்நாள் போட்டிகளில் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடந்த 1990 ஆம் ஆண்டு மாவட்டபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை பவித்தா அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

இப்போட்டிகள் எதிர்வரும் 27.07.2024 சனிக்கிழமை தெரிவுப்போட்டிகளாகவும் 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகளாகவும் Centre sportif Nelson Mandela Avenue Paul Langevin 95200 SARCELLES என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது..

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ‌ஆரம்பமாகியிருந்தன.

பிரான்சு தேசத்தில் உள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்களான

தமிழர் விளையாட்டுக் கழகம் 93,

தமிழர் விளையாட்டுக்கழகம் 94,

தமிழர் விளையாட்டுக்கழகம் 95,

அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம்,

நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகம்,

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம்,

FC 93 விளையாட்டுக்கழகம்,

யாழ்டன் விளையாட்டுக்கழகம்

ஆகிய கழகங்களிடையே ஓட்டம், பந்தெறிதல், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், கயிறடித்தல், நின்றுபாய்தல், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், பொருட்கள் சேகரித்தல, அஞ்சல் ஆகிய போட்டிகள் வயதடிப்படையில் சிறப்பாக இடம்பெற்றன.

இருநாட்களும் செல்வி சிவசுபாஸ்கரன் சிவசுவேதா, திருமதி கஜன் ராஜனி ஆகியோர் தமது குரல் வளத்தால் நிகழ்வைத் திறம்பட நடத்தியிருந்தனர்.

இப்போட்டிகளை நடத்துவதற்கு அனைத்துக் கட்டமைப்புக்களின் செயற்பாட்டாளர்களோடு, தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்களின் பங்களிப்பும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here