பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் – 2024

0
133

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று (20.07.2024‌ ) சனிக்கிழமை காலை 9.00, மணிக்கு Stade du Moulin Neuf. 06, AV. du Maréchal Juin 93600 AULNAY – SOUS – BOIS என்னும் இடத்தில் சிறப்பாக ஆரம்பமாகி இன்று (21.07.2024) ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

இன்றைய போட்டிகளில் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடந்த 1990 ஆம் ஆண்டு மாவட்டபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை பவித்தா அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ‌ஆரம்பமாகின.

இப்போட்டிகள் எதிர்வரும் 27.07.2024 சனிக்கிழமை தெரிவுப்போட்டிகளாகவும் 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகளாகவும் Centre sportif Nelson Mandela Avenue Paul Langevin 95200 SARCELLES என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது..

பிரான்சு தேசத்தில் உள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்களான

தமிழர் விளையாட்டுக் கழகம் 93,

தமிழர் விளையாட்டுக்கழகம் 94,

தமிழர் விளையாட்டுக்கழகம் 95,

அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம்,

நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகம்,

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம்,

FC 93 விளையாட்டுக்கழகம்,

யாழ்டன் விளையாட்டுக்கழகம்,

ஈழவர் விளையாட்டுக்கழகம்
என பலநூறு கழக வீரர்கள் 2024 போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.
மாவீரர் நினைவு சுமந்த இப்போட்டிகளில் அனைத்து தமிழீழ மக்களையும், வீர வீராங்கனைகளையும் பங்குகொண்டு சிறப்புச் செய்யுமாறும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here