முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெட்டாங்கேணி எனும் கிராமத்தில் பொதுமக்களின் வயல் நிலங்களுக்குள் அகற்றப்படாத நிலையில் பல மிதிவெடிகள் காண ப்படுவதாக அப் பகுதி மக்கள் தெரி வித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் மக்கள் நெற்பயிற் செய்கை மேற்கொண்டு வரும் நிலையில் அப் பகுதியில் பலமிதிவெடி கள் இருப்பதைவிவசாயிகள் கண்டுள்ளனர். இதனால் தமக்கும் தமது கால் நடைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி பாதுகாப்பற்ற பிரதேசம் என அடையாளப்படுத்தாமல் இரு ந்த காரணத்தால் மக்கள் அதில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொ ண்டுள்ளனர்.
ஆனால் தற்போது ஆங்காங்கே மிதி வெடிகள் காணப்படுவதால் அச்சமடைந்த மக்கள் தமது பாதுகாப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்துமாறும் மிக விரைவாக மிதிவெடிகளை அகற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.