அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!
சிறிலங்காவில், இனப்படுகொலையாளி ஜே.ஆர் ஜெயவர்த்தனா அவர்களின் ஆட்சிக் காலத்தில் பேரினவாத பரப்புரைச் சதியின் ஊடாக திட்டமிட்டவகையில் , தமிழர்கள் மீது 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் நிகழ்த்தப்பட்ட கறுப்பு யூலை (Black july) தமிழின அழிப்பில், 5000 ஆயிரம் வரையிலான பெருந்தொகையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும் உடமைகள் அழிக்கப்பட்டும் உயிர் காத்திட வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்ததும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டும் சித்திரவதைக்களுக்குள்ளாக்கப்பட்டும் பலர் உயிருடன் எரிக்கப்பட்டும் சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்டும் 41 ஆண்டுகள் கடந்தும், இன்று வரை நீதி கிடைக்காமல் தமிழினம் நீதி வேண்டி போராடி வருகிறது. உச்சமான இந்த இனப்படுகொலையே இளையோர்களை ஆயுதம் ஏந்தி போராடவைத்து அதற்காக 40 ஆயிரம் வரையிலான மாவீரச் செல்வங்களையும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களையும் பறிகொடுத்ததோடு பல்லாயிரம் கோடி சொத்துக்களையும், சுகங்களையும் இழந்து புலம்பெயர்ந்து அகதியென்ற பட்டத்துடன் வாழ்ந்தாலும் இழந்த உரிமைக்காக தொடர்ந்து சனநாயகவழியில் போராடிக்கொண்டேயிருக்கின்றோம்.
பிரான்சு அரசுக்கும், ஐரோப்பிய அரசுக்கும் 2024 இன்றுவரை சிங்கள பேரினவாத அரசு தமிழர் இனவிரோதத்தையும் தொடர்ச்சியாகவே செய்து வருகின்றது. தினமொரு உயிர் நாளாந்தம் அத்தீவில் இறந்து கொண்டிருப்பதையும், ஈழத்தமிழினத்தின் உரிமைக்கான அரசியல் போராட்டத்தையும், அதன் நியாயத்தையும் தொடர்ந்து பிரெஞ்சு அரசுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து தெரியப்படுத்தும் நிலையில் தான் பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் நாம் நின்று கொண்டிருக்கின்றோம்.
அண்மையில் ஒலிம்பிக்தீபத்தை தமிழர் கையிலேந்திச் செல்கிறார் என்று ஆனந்தக்கண்ணீருடன் எமது தேசியத்தின் அடையாளத்தை இளையவர்கள் கைகளில் ஏந்தி நின்றவேளை அதனை அகற்றி அவர்களை அழவைத்த சம்பவமானது எமது அடையாளத்தையும், தேசியத்தையும் இந்த நாடுகளில் அரசியல் வழிகளில் தொடர்ந்தும் பதியச் செய்யவேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் கடமையாகும். பிரித்தானியா போன்று வரப்போகும் காலத்தில் அரசியலில் நாமும் பங்காளர்களாக வரவேண்டும் அந்த வல்லமை எம்மிடம் பல்கிப் பெருகிக்கிடக்கின்றது. அதனை எமக்காக பயன்படுத்துவோம். வாருங்கள்
23.07.2024 செவ்வாய்க்கிழமை பி. பகல் 3.மணிக்கு Place de la République (சுதந்திரதேவியின் சிலை ) முன்பாக நடைபெறும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தமிழர்களும் பங்கெடுப்போம் வாருங்கள்! ( இதனை ஏனையவர்களுக்கும் பகிரவும்)
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு