பிரான்சில் பரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற மகிழுந்து – பாரவூர்தி விபத்தில் மகிழுந்தில் பயணம் செய்த தமிழ் இளைஞர் உட்பட நண்பர்களான இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகிழுந்தை செலுத்திச் சென்ற ஆபிரிக்க இளைஞர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
கடந்த 10.07.2024 புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பிரான்சைப் பிறப்பிடமாகவும் தற்போது பிரித்தானியாவில் மேற்படிப்பைத் தொடர்ந்து வந்தவருமான சுதந்தன் சஞ்சை (வயது 22) என்ற தமிழ் இளைஞரே சாவடைந்தவராவார். இவருடன் உயிரிழந்த மற்றையவர் அராபிய இளைஞர் எனத் தெரியவருகின்றது.
சுதந்தன் சஞ்சை அவர்களின் இறுதி நிகழ்வு பிரான்சில் எதிர்வரும் 24.07.2024 புதன்கிழமை காலை நடைபெறவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.