தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள் எதிர்வரும் 20 ஆம், 21ஆம், 27ஆம் நாட்களில் தெரிவுப்போட்டிகளாகவும் 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகளாகவும் நடைபெறவுள்ளது.
பிரான்சு தேசத்தில் உள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்களான
தமிழர் விளையாட்டுக் கழகம் 93,
தமிழர் விளையாட்டுக்கழகம் 94,
தமிழர் விளையாட்டுக்கழகம் 95,
அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம்,
நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகம்,
வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம்,
FC 93 விளையாட்டுக்கழகம்,
யாழ்டன் விளையாட்டுக்கழகம்,
ஈழவர் விளையாட்டுக்கழகம்
என பலநூறு கழக வீரர்கள் 2024 போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளாக அனைத்து விளையாட்டுக்கழகங்களின் வீரர்களின் பதிவு ஏற்பாடுகள் மெய்வல்லுநர் போட்டிக்குழுவின் செயற்பாட்டில் நிறைவுபெற்று முடிந்துள்ளன. இச்செயற்பாடுகளில் ஒவ்வொரு ஆண்டுகள் பல இளையவர்கள் இணைந்து பணியாற்றிவருகின்றனர். ஆண்டுதோறும் உடல் உள ஆரோக்கியத்திலும் விளையாட்டு வீரர்களுக்குரிய பண்பான விட்டுக் கொடுத்தல் , தட்டிக்கொடுத்தல், தன் திறனை வளர்த்துக் கொள்ளுதல், மண்ணுக்கும், இனத்திற்கும், மாண்புடன் மண் விடுதலைக்காக தம்மை ஈந்த மாவீரர்களுக்கும் மகிமையும் பேரையும், புகழையும் பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்களை வீரனானவன் தானும் பெற்று தனது அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் ஒரு களமாகவே இப்போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
முதல் 20 ஆம் நாள் சனிக்கிழமையும், 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையும் Stade du Moulin Neuf. 06, AV. du Maréchal Juin 93600 AULNAY – SOUS – BOIS என்னும் இடத்திலும்
27ஆம் நாட்களில் தெரிவுப்போட்டிகளும் 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகளும் Centre sportif Nelson Mandela Avenue Paul Langevin 95200 SARCELLES என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.
மாவீரர் நினைவு சுமந்த இப்போட்டிகளில் அனைத்து தமிழீழ மக்களையும், வீர வீராங்கனைகளையும் பங்குகொண்டு சிறப்புச் செய்யுமாறும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு கேட்டுக்கொண்டுள்ளது.