குடும்பத்துடன் விடுமுறைக்குச் சென்ற நிலையில் இரண்டு வயது தமிழ் ஆண் குழந்தை நீர் நிலையில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் குடும்பத்துடன் விடுமுறைக்கு பெற்றோருடன் சென்ற போது நீர் நிலை ஒன்றில் தவறி வீழ்ந்த இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .இச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் முல்லைத்தீவு மல்லாவி பகுதியைச் சேர்ந்த குலேந்திரா நிதுர்ஷன் வயது 2 என்ற ஆண் குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.