மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மறைந்து 5 மாதங்களாகி விட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேஸ்வரம், பேய்க்கரும்பு ஸ்தலத்திற்கு தொடர்ந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் அந்த இடம் இப்போது புனிதத்தை இழந்து வருகிறது. ஆடு மாடுகள் மேய்கின்றன. நாய்கள் திரிகின்றன. நினைவிடம் அமைப்பது குறித்து மத்திய அரசு வாயே திறக்காமல் இருப்பது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.பேய்க்கரும்பு என்ற இடத்தில்தான் கலாமின் உடல் நல்லடக்கம் நடைபெற்றது. அந்த இடம் தற்போது மக்கள் தவறாமல் வரும் இடமாக மாறியுள்ளது. ஆனால் அந்த இடத்தின் பராமரிப்புதான் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஆரம்பத்தில் நல்ல கவனிப்பின் கீழ் இருந்த இந்த இடம் தற்போது புறக்கணிப்புக்குரியதாகியுள்ளது.இங்கு நினைவிடம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. சத்தத்தையே காணோம்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cows-dogs-defecate-near-kalam-s-kabar-rameswaram-242726.html