உடலை வெடியாக்கிய எரிமலைகள் கரும்புலிகள்!

0
122

கருப்பு உடை தரித்து
நெருப்பில்
கருத்தரித்த.. கதிரவன்கள்
கரும்புலிகள்…!

உயிரைத் திரிமூட்டி
உடலை வெடியாக்கும்
எரிமலைகள்
கரும்புலிகள்

விடுதலைச் சமரில்
காற்று நுழையா
இடத்திலும்.. கணையாய்
நுழையும் தீச்சுடர்கள்
தரை கடல் வான்
கரும்புலிகள்..

தலைவர்
தலையாய.. அரணாய்
உருவாக்கி யேற்றிய
நெருப்பாகி ஒளிர்ந்த ஒளிகள்
கரும்பு புலிகள்..

தமிழீழ இனத்தின்
தற்காப்பு கவசங்கள்
கரும்புலிகள்
எதிரியின் படையை
பொசுக்கிடும் நெருப்புமனிதர்கள்
கரும்புலிகள்…

இனம் இன்புற்றிருக்க
தன்னை இல்லாதொழிக்கும்
தெய்விப் பிறவிகள்
கரும்புலிகள்

இரும்பான உறுதியும்
கரும்பான மனதும் கொண்ட
மா மனித நேயர்கள்
கரும்புலிகள்..

இனத்தை
சூழ்ந்திருக்கும்
இருட்டுக்கு
கரும்புலிகள்
நெருப்பால்
ஒளியேற்றுவோம்..

விடுதலை கரம் பிடிக்க
கை கோர்த்து
இனத்தின் பகையினை எரிக்க
உறுதியேற்போம்!!!

  • கவிபாஸ்கர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here