தமிழ்மக்கள் பேரவை அரசியல் கட்சி அல்ல (முதலமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு)

0
204
ta 12தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். அது ஒரு அரசியல் கட்சியோ, மாற்று தலைமையை ஏற்படுத்துகின்ற அமைப்போ அல்ல என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்களின் கேள்விகள் தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். பலவிதமான மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், கட்சிகளும் சேர்ந்து நல்லை ஆதீனம் போன்ற மதச்சாரியார்கள் உள்ளடங்கலாகத் தொடங்கியுள்ள ஒரு மக்கள் இயக்கம் இது. இதற்கு தலைமை வகிக்க  ஏற்பாட்டாளர்கள் குழு என்னை அழைத்தார்கள்.
உண்மையில் இணைத் தலைவராகத் தான் என்னை அழைத்தார்கள். வைத்திய கலாநிதி லக்ஷ்மனும் மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத் செயலாளர் வசந்தராஜா அவர்களும் என்னுடன் இணைத் தலைவர்களாக இருக்கிறார்கள். இது ஒரு அரசியல் கட்சி அல்ல. அரசியலில் குதிக்கும் எண்ணம் கூட இதற்கு இருக்கமாட்டாது.
இது வரைகாலமும் நாங்கள் அரசியல் தீர்வு பற்றி பேசி வருகின்றோம். எப்பேர்பட்டதீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை இதுவரையில் எவருமே வெளிப்படுத்தவில்லை. அத்துடன் சமூகப் பிரச்சினைகள் பலவுண்டு. அவைபற்றி நாங்கள் விஞ்ஞான ரீதியாக முறையாக ஆராயமுற்பட வில்லை. எனவேதான் இப்பேர்ப் பட்டமக்கள் குழுவொன்று பல நல்லகாரியங்களில் இறங்குகின்றது என்று அறிந்தபோது நான் அதில் பங்குபற்ற இசைந்தேன்.
அரசியல் கட்சிகளையும் அழைத்ததாகக் கூறினார்கள். சித்தார்த்தன் வருவதாகக் கூறியிருந்தார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வந்திருந்தார். அரசியல் ரீதியான விடயங்களை ஆராய இருப்பதால் அரசியல்வாதிகள் அதில் பங்கேற்பதில் என்ன பிழையிருக்கின்றது?
எமது மாகாண சபை எதிர்க்கட் சித்தலைவர் தவராசா அவர்களுடன் மிக சுமுகமான உறவையே நாம் பேணிவருகின்றோம். அதற்காக நாங்கள் சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தமில்லை. கஜேந்திரகுமார் முன்னர் சம்பந்தனின் வலதுகையாகச் செயற்பட்டவர். அவருடன் ஒரு கூட்டத்தில் நான் காணப்பட்டால் நான் புதிய கட்சியொன்றை உருவாக்க முனைந்துள்ளேன் என்று அர்த்தமா?
‘நான் ஊமை’ என்று கூறியதன் காரணம் ஏற்பாட்டாளர்கள் அறிக்கை ஒன்றினை தாங்களே கொடுப்பதாக கூறியமையினால், அவர்கள் அறிக்கையைத் தரும் போது நான் இன்னுமொரு அறிக்கையை தருவது முறையன்று. எனவே தான் அவ்வாறு கூறினேன்.
இந்தப் பேரவை அரசியற் கட் சியல்ல. மாற்றுத் தலைமையினை ஏற்படுத்துவதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும் போருக்குப் பிந்திய எமது தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் தொடர்பிலான சிவில் சமூகப் பிரதி நிதிகளுடனான

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here